குறுந்தகவல்கள்

கடலூரில் உள்ள மீனவர்களை அடிப்படையாக வைத்து ஜெயகாந்தன் ஒரு நாவலை எழுதினார்.
குறுந்தகவல்கள்

✽ ஈரோட்டில் பெரியார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு கடிதம் அனைவரையும் நெகிழச் செய்யும். "தன் மகன் பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றதாகவும், போலீஸ் வேலையில் சேர்க்க யாரையேனும் சிபாரிசு பிடிக்கச் சொல்லவும்'' என்று தந்தை பெரியாருக்கு 1936} ஆம் ஆண்டு எழுதியுள்ளார் கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி .
 ✽ கடலூரில் உள்ள மீனவர்களை அடிப்படையாக வைத்து ஜெயகாந்தன் ஒரு நாவலை எழுதினார். தற்செயலாக மாப்பசான் எழுதிய நாவலொன்றைப் படித்தபோது மாப்பசானும் தன்னைப் போலவே ஒரு நாவலை எழுதியதை அறிந்து அதைக் கிழித்தெறிந்து விட்டார்.
 ✽ "கவியின் கனவு' என்னும் நாடகத்தில் ராஜகுரு வேடத்தில் நடித்த எம்.என். நம்பியார் அக்கம்பெனியைவிட்டு விலகியபோது அவ்வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம்.
 - வி.ந.ஸ்ரீதரன்,
 சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com