வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

சிரி... சிரி... சிரி... சிரி... 

DIN | Published: 28th April 2019 10:05 AM

* "என்னது , பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்பவே உஷாரான பார்ட்டியா?''
"ஆமாங்க, கல்யாணமாகி எங்க வீட்டுக்கு வந்த பிறகு, 
உங்க பெண் மெகா சீரியல் பார்த்து கண் கலங்கினா 
நாங்கள் பொறுப்பில்லைன்னு இப்பவே சொல்லிட்டாங்க''
ஆர்.விஸ்வநாதன், சென்னை.

* ஆசிரியர்: காந்திஜி மண்ணெண்ணெய்
விளக்குலதான் படிச்சாரு.
கிரகாம்பெல் மெழுகுவர்த்தி வெளிச்சத்துலதான் படிச்சாரு
மாணவர்: இவங்க எல்லாம்
பகல்ல என்ன பண்ணிட்டு
இருந்தாங்க சார்?
எஸ். பொருநைபாலு, 
திருநெல்வேலி. 

* அப்பா: ஏன் சார் என் மகனை பெஞ்சுக்கு மேலே ஏறி
நிக்க வச்சீங்க?
ஆசிரியர்: கட்டபொம்மனை தூக்கில் போட்ட இடம் 
எதுன்னு கேட்டா
கழுத்துங்கிறான்.
டி.மோகன்தாஸ், நாகர்கோவில். 

* "பேப்பர் போடற பையனை
பால் பாக்கெட் போடுற வேலைக்கு
வச்சுக்கிட்டது தப்பா போச்சு''
"என்னாச்சு சார்?''
""பேப்பர் மாதிரியே பால் பாக்கெட்டையும் வீசி எறியுறான் சார்''
வி.ரேவதி, தஞ்சை 

* "டாக்டர்! என்னை எப்போ
டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க?''
" உங்களுக்கு ரொம்ப அவசரம்ன்னா
இன்னொரு பேஷண்டை கூட்டி வந்து இந்த பெட்ல அட்மிட் பண்ணிட்டு நீங்க போகலாம்'' 
கு.அருணாசலம், தென்காசி.

* அவர்: ஆபீஸ்ல பேப்பர் படிக்கிறீங்களே... மானேஜர் கேட்க மாட்டாரா?
இவர்: மனசுக்குள்ளதானே படிக்கிறேன். எப்படி கேட்பாரு?
தீபிகா சாரதி, சென்னை. 

* "வாழ்க்கையில, நான் கரடுமுரடான
பாதைகளையெல்லாம் கடந்து வந்தவன்ங்க''
"எப்படி?''
"எப்பவுமே நான் செருப்பில்லாமல் தாங்க நடப்பேன்''
வெ.ராம்குமார், வேலூர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புழுதி
மைக்ரோ கதை
பேல்பூரி
சிரி... சிரி...
திரைக் கதிர்