செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

சிக்கல்களும் ராதிகாவும்!

Published: 21st April 2019 08:54 AM

ஒன்பதாவது படிக்கும் போதே, கன்னட படவுலகில் நுழைந்தவர் ராதிகா குமாரசாமி. முதல் படம் "நீல மேக சாமா'. இதில் விஜய ராகவேந்திராவுடன் நடித்தார். அடுத்த படம், சிவராஜ்குமாருடன். 2003-ஆம் ஆண்டு, 5 கன்னட படங்களில் நடித்தார். இதில் ஒரு படத்திற்காக ராதிகாவுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
 தமிழில் "இயற்கை', "ரிஷி', "மசாலா', "ஆட்டோ சங்கர்', "வர்ணஜாலம்', "உள்ளக் கடத்தல்' போன்ற படங்களில் நடித்தார்.
 சொந்த வாழ்க்கையில் சிக்கல்களை சந்தித்தவர் இவர், 2000-ஆம் ஆண்டு, கர்நாடகாவின் கடில் துர்காபரமேஸ்வரி கோயிலில், ரத்தன்
 குமார் என்ற நபரை மணந்தார் என வதந்தி நிலவியது. அப்போது ராதிகாவுக்கு வயது 14. அதனால் பெற்றோர் தன்னுடன் வாழ அனுப்பவில்லை என கூறிக் கொண்டிருந்தார் ரத்தன்குமார்.
 எதிர்பாராதவிதமாக ரத்தன் குமார் 2002- இல் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார். அதன்பிறகு, 2006-ஆம் ஆண்டு இன்றைய கர்நாடக முதல்வர் குமாரசாமியை மணந்து கொண்டதாகவும், தங்களுக்கு
 சர்மிகா என ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் 2010-இல் ராதிகா, ஊர் அறிய அறிவித்தார்.
 அதன்பின் சில சமயம், தயாரிப்பு மற்றும் பட விநியோகத்தில் ஈடுபட்டார். தனது மகள் சர்மிகா பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, குத்து ரம்யாவை வைத்து ஒரு படம் தயாரித்தார். இதற்கிடையில் சினிமாவில் நடிக்கவும் முயற்சி மேற்கொண்டார். இப்போது லேட்டஸ்ட்டாக 5 கன்னட படங்களில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள "கோன்டிராக்ட்' படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. "ராதிகா குமாரசாமி ஒரு நல்ல நடிகை. முயன்றால், கன்னடப் படவுலகில் நிச்சயம் ஒரு ரவுண்ட் மீண்டும் வருவார்'' என்கிறார்கள் கன்னட ரசிகர்கள்.
 - ராஜிராதா

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புழுதி
மைக்ரோ கதை
பேல்பூரி
சிரி... சிரி...
திரைக் கதிர்