பேல்பூரி

வாம்மா தேவதை
பேல்பூரி

கண்டது

(கோவை அவிநாசி  சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையின் பெயர்)

வாம்மா தேவதை

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

(மாப்பிள்ளைக்குப்பம் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த 
வாழ்த்து போஸ்டரில்)

சண்டைக்கும்  பந்திக்கும் முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்

சி.முருகேசன், மாப்பிள்ளைக்குப்பம். 

(சென்னை காட்டுப்பாக்கத்தில் ஓர் உணவகத்தின் பெயர்)

பாட்டி சுட்ட இட்லி

இளன், சென்னை-125.

யோசிக்கிறாங்கப்பா!

10 முறை உதவினாலும் 11 ஆவது முறை உதவாவிட்டால்...
அது மட்டும்தான் பெரியதாகத் தெரிகிறது எல்லாருக்கும்.

இரா.சிவானந்தம், கோவில்பட்டி.

கேட்டது

(மயிலாடுதுறை பேருந்துநிலையம் அருகே இருவர்)

""மறந்துடாதீங்க... நம்ம தலைவருக்கே ஓட்டைப் போட்டுருங்க''
"" போடலாம்... ஆனா என் தொகுதியிலே அவர் நிக்கலையே... அதுதான் குழப்பமா இருக்கு''

க.பன்னீர்செல்வம்,  மாப்படுகை.

(காட்டுமன்னார்கோயிலில் தந்தையும் 10 ஆம் வகுப்பு படிக்கும் பையனும்)

""வாழ்க்கை ஒரு முள் பாதை. முள் குத்தும்போது வலியைத் தாங்கிக்கிட்டு முள் மேல நடக்குறவன்தான் திறமைசாலி''

""முள் குத்தும்னு தெரிஞ்சு செருப்பு போட்டுக்கிட்டு நடக்குறவன் புத்திசாலிப்பா''

 தி.மதிராஜா,  சின்னபுங்கனேரி.


மைக்ரோ கதை


குப்பன் ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே வந்தார். பூத் ஏஜெண்டிடம் ""என் மனைவி ஓட்டுப் போட்டுவிட்டு போய்விட்டாளா?''  என்று கேட்டார்.

குப்பனின் மனைவியின் பெயரைக் கேட்ட ஏஜெண்ட், லிஸ்ட்டைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ""ஆமாம்... ஓட்டுப் போட்டுவிட்டு போயிட்டாங்க'' என்றார். 

குப்பன் வருத்தத்துடன், ""கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா அவளைப் பார்த்திருக்கலாம்'' என்றார். 

பூத் ஏஜெண்ட் கேட்டார்: "" ஏன்ண்ணே... அக்கா உங்க கூட இல்லியா?''

குப்பன் சொன்னார்: ""இல்லை தம்பி... அவ செத்து பதினைஞ்சு வருஷமாச்சு. ஓட்டுப் போட மட்டும் வந்துட்டுப் போறா''

சுகந்தாராம், சென்னை-59


எஸ்.எம்.எஸ்.

பிடித்தவர்களை அதிகமாக நேசி...
பிடிக்காதவர்களை  அதைவிட அதிகமாக நேசி.

கி.ரவிக்குமார், நெய்வேலி.


அப்படீங்களா!

ஏஸி கார்கள் இப்போது அதிகமாகிவிட்டன.  காரின் கதவுகளைத் திறந்து வைத்துப் பயணிப்பது குறைந்துவிட்டது.  காருக்குள்ளே சுற்றிச் சுற்றி வரும் காற்று மாசடைந்து விடுகிறது.   சுற்றுப்புறத்திலுள்ள காற்றைத் தூய்மைப்படுத்தும் திறன் கொண்ட இந்த கருவி,  காருக்குள் உள்ள காற்றைத் தூய்மையாக்க பெரிதும் பயன்படுகிறது. 

சுற்றுப்புறத்திலுள்ள நாற்றத்தை இந்தக் கருவி நீக்கிவிடும். இந்தக் கருவியை எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.  வெறும் 40 கிராம் எடை உள்ள  இந்த கருவி கெட்ட காற்றை உள்ளிழுத்துத் தூய்மைப்படுத்தி வெளியே அனுப்புகிறது. 

என்.ஜே., சென்னை-116.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com