காதலர் தினம்

ரசனையும் கடந்துபோகும்!

14th Feb 2021 06:20 AM | ஆர். சரவணன்

ADVERTISEMENT

காதலர் தினம் என்றால் எல்லாருக்கும் ஒருவித இனம்புரியா இன்பம் தொற்றிக் கொள்ளும்! 

உனக்கு ஏழு கழுத வயசாகுது என்று என்னைக் குட்ட வேண்டாம்.. 
ஏனென்றால் நான் தான் அவளின் 'குட்' "உட்பி" ஆயிற்றே!

இந்த மாதிரி மொக்க கவிதைகளும் தோன்றும் நாள்தான் இந்த காதலர் தினம்!

சில நல்ல கவிதைகளும் கவிஞர்கள் படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றில் அனைத்து வயதினருக்கும் பிடித்தது தபு சங்கர் கவிதைதான்.

ADVERTISEMENT

சங்கரை மட்டுமே தெரிந்த எனக்கு தபு சங்கர் என்ற கவிஞர் இருக்கிறார்
என்பதே அவளைப் பார்த்த பின்பு தான்!   

உன்னைப் பார்த்தால்
எடை பார்க்கும் இயந்திரம்கூட
கவிதை எழுத
ஆரம்பித்துவிடும் போல.
உன் எடையை அடிக்க வேண்டிய
இடத்தில்
அழகு நீங்கலாக 50 கிலோ என்று
அடித்திருப்பதைப் பார்!

இது ஒரு சாம்பிள்தான் தபு சங்கர் கிட்ட இருந்து.

கவிதை எழுதுனா தான் காதல் வருமான்னா 'கவிதையா இருக்கிற நீ தான் என் காதல்'னு கூட ஒரு கவிதை எழுதலாம்! 

இந்தாப்பா இப்போ ஏன் இந்த கவிதை டாபிக் எடுக்குற அதுவும் இந்த காதலர் தினம் அதுவுமா'னு கேட்கலாம்.. விஷயம் இருக்கு... காதல் கவிதை பற்றி தெரிந்து கொள்பதற்கு முன்பு, இலக்கியங்களில் காதல் மற்றும் காதல் சார்ந்த விஷயங்கள் எவ்வாறு உள்ளன என்பதைப் பற்றி கவனிக்க வேண்டும்.  என்னயா திடீர்னு இலக்கியக் காதலுக்கு போகுற, எனக்கு நாடகக் காதல் தானே தெரியும்'னு சொல்ற மைன்ட் வாய்ஸ் கேட்குது. 

இலக்கியக் காதலில் மிகவும் முக்கியாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது ஒரு தலைவன் தலைவியை எவ்வாறு வர்ணிக்கிறான் என்பதே! எதே.. தலைவன், தலைவியா..! உடனே தலைவன்னா பவர் ஸ்டாரையும், தலைவினா ஏ.ஒன்.னையும் நினைக்க வேண்டாம். நான் கூற வரும் தலைவன், தலைவி இலங்கியங்களில் வரும் ஹீரோ, ஹீரோயின்.

காதல் பற்றி இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டாலும், அனைவரையும் கவர்ந்த இலக்கியம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தான். அதன் முதன் அத்தியாத்திலேயே தலைவியைப் பார்க்க வரும் தலைவன் எவ்வாறெல்லாம் நாட்டின் அழகு, தலைவியுடன் ஒத்துப்போகிறது என்பதை கவிரசத்தோடு கூறியிருப்பார். அந்த ரசனை தான் கவிதைக்கு அடித்தளம்! 

ரசனை இருந்தால் கவிதை தானாகவே வரும். கவிதை வந்தால் காதலும் வரும்! ரசனையை வளர்த்துக் கொள்ளுங்கள். நாயகியின் தலை முடி முதல் பாதம் வரை ரசியுங்கள். 

ரசனை என்றதும் அது ஆண், பெண் காதலில் மட்டுமே உள்ளது என எண்ணவேண்டாம். ரசனை என்பது நீங்கள் உண்ணும் உணவில் இருக்கலாம், உடுத்தும் உடையில் இருக்கலாம், பார்க்கும் பார்வையிலும் இருக்கலாம். சிலருக்கு அங்கவை, சங்கவைகூட அவர்களது பார்வையில் கீர்த்தி சுரேஷை விட அழகாகத் தெரியலாம்.  ஆக, ரசனை என்பது எதில் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அந்த ரசனை மற்றவர்களின் எண்ணங்களைக் கெடுப்பது போல் இருக்கக் கூடாது. சிம்பிளா சொல்லனும்'னா கவிதைகளை பொறுத்தவரை தபு சங்கரை போன்று இருக்க வேண்டும். 

ரசனை இருந்தால் கவிதை, 
கவிதை இருந்தால் காதல் வரும். 
சரி ரசனை வரனும்'னா என்ன செய்யனும்'னு கேட்கலாம்.. ரசிங்க.. அது போதும். 

ஒரு காலத்தில் "பேயை" பார்த்து  பயந்த நாம் இன்றைய காலகட்டங்களில் அதை வெவ்வேறு உருவங்களில் ரசிக்கக் கற்றுக் கொண்டுள்ளோம். ஆக..ரசிப்பது என்பது ஒரு விசயத்தைக் கற்பது. கற்பது என்பது ஒரு விசயத்தில் உங்களை அழாமாக ஈடுபடுத்திக்கொள்வது. அதனால் தான் காதல் போன்ற விசயங்கள் நம்மூர்களில் இன்றும் நிலைத்து நிற்கிறது. எனவே எந்த விசயங்களில் ஆர்வமாக இருக்கிறோர்களோ அதையே கற்க ஆரம்பியுங்கள்.. 
ரசனை தானாக வரும்! 

"சாம்பார்" செய்வது என்பது ஒரு கலை. ஆனால் அந்த கலையில் ஈடுபாடுடன் அல்லது ரசனையுடன் செய்யப்படுவதால் தான் பிளாட்பாஃம் கடைகளின் தட்டுகளில் நாக்கில் சுவையாகவும், ஐந்து நட்சத்திர உணவகங்களில் கண்ணுக்கு விருந்தாகவும் மட்டுமே அமைகிறது! 

ஓ.டி.டி.யில் வரும் படங்களை விட சினிமா தியேட்டர்களில் வரும் படங்களை மக்கள் ரசிக்கின்றனர். ஏன்? சினிமா பார்க்கும் ஈடுபாடு இருப்பதால் தான். தியேட்டர் தரும் ஈடுபாடு ஓ.டி.டி. தருவதில்லை.

ஆண்கள் படிக்கும் கல்லூரி என்பது இப்போது வெகுவாக குறைந்து விட்டது.. ஏன் ஆண்களுக்கு படிப்பு வரவில்லை என்பதாலா? இல்லை. படிப்பு என்பது இருவருக்குமே சமம், இருவரும் ஈடுபாட்டோடு படிக்க வேண்டும் என்பதே. அதனால் தான் படிப்பும் நேசிக்கப்பட வேண்டியுள்ளது.

கவிதைகளில் ஈடுபாடு என்பது  சாதாரண விஷயம் அல்ல. அது ரசனை சம்பந்தப்பட்டது.

இன்றைய பல காதல்கள் (ஆண் பெண் காதலும்கூட) பெரும்பாலும் நுகர்வு கலாசாரத்தை ஒட்டியே உள்ளது. ஐம்பது ரூபாய்தான் ஆரம்ப விலையாய் இருக்கிறது இன்றைய காதல். ஆக, காதலர்களின் எண்ணமும் நுகர்வை ஒட்டியே அமைகிறது. 

ஒரு காலத்தில் காதலை வெளிப்படுத்த பல சமிக்ஞைகள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் கவிதை. இன்று அது டிஜிட்டலுக்கு மாறி இருந்தாலும், உணர முடிவதில்லை. ஒரு ஸ்வெட்டரில் எம்ராய்டரி வேலை செய்து அதை அன்பளிப்பாக கொடுப்பதில் இருந்து ஒரே 'லவ் அன்ட் லவ் ஒன்லி' அட்டை பரிமாறுவது வரை காதல் உணரப்பட்டது. இன்று அது உணர்வாக இல்லாமல் நுகர்வாக மாறி உள்ளது. 

காதலை ஒரு உணர்வாக மாற்ற கவிதை மட்டுமே தேவைப்படும். ஆனால் நுகர்வாக மாற்ற இன்றைய இளைஞர்களுக்கு பெற்றோர்கள் வாங்கி கொடுத்த பைக் போதுமானதாக உள்ளது.

இதில் உணர்வு காதல் இல்லை. நுகர்வு காதல் மட்டுமே உள்ளது. அதனால் தான் சேர்ந்த பத்தே நிமிடத்தில் பிரிந்து அடுத்த ஒன்றிற்கு தாவி விடுகிறார்கள். உணர்வை வெளிப்படுத்த கவிதை என்ற பொக்கிசமே சிறந்தது.

ஆக.. காதல் செய்ய.. கவிதை முக்கியம்.. 
கவிதைக்கு ரசனை முக்கியம்...
ரசனைக்கு ஈடுபாடு முக்கியம்..

காதல் கடந்து போகும், ரசனை கடந்து போவதால்.. அப்பாட தலைப்போட முடிச்சாச்சி! 

(லவ் ஃபெயிலியர் மக்களே ரசிங்க காதல் கைகூடும்!)
ஆப்பி வேலண்டைன்ஸ் டே!

Tags : valentinesday
ADVERTISEMENT
ADVERTISEMENT