உங்களுக்குத் தெரியுமா..?

உங்களுக்குத் தெரியுமா..? பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது..? 

28th Aug 2019 04:23 PM

ADVERTISEMENT


நம்மில் பலருக்கும் மத்திய பட்ஜெட்டை நிர்ணயிப்பது, செயலாக்குவது குறித்த எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுகுறித்து இன்றைய பதிவில் பார்ப்போம்...

இன்றைக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் என்ற செய்தி வெளியானாலும் போதும் தேசம் முழுவதும் ஆல மரத்தடியில் தொடங்கிய பேச்சு ஆகாயம் வரை நீலும். எந்த திசை நோக்கினாலும் பட்ஜெட் குறித்த பேச்சும், விவாதம், கருத்துக்கள் என நாடே பரப்பரப்பாக பேடுவதற்கு காரணம் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கின்றது "பட்ஜெட்" என்பது தான்.

அத்தகைய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) பொருளாதார மாணவர்களுக்கு எவ்வாறு முக்கியமோ அவ்வளவு முக்கியம் போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு. பட்ஜெட் குறித்து சிறப்பாக தெரிந்து கொள்ளும் ஒருவருக்கு நாட்டின் முக்கிய அம்சமான பொருளாதாரத்தைப் பற்றிய அவுட்லைன் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் பட்ஜெட்: இந்தியாவில் பட்ஜெட் பிரிட்டிஷ்காரர் காலத்தில் இருந்து பட்ஜெட் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பிரிட்டிஷ்காரர் ஆட்சிகாலத்தில் முதன்முறையாக பிப்ரவரி 18, 1869 இந்தியாவில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. 

ADVERTISEMENT

இந்தியாவில் பிரிட்டிஷ்காரர் ஆட்சிகாலத்தில் முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தவர் ஜேம்ஸ் வில்சன் ஆவார். இந்தியாவின் நிதி உறுப்பினராக இருந்த ஜேம்ஸ் வில்சன் இந்தியா கவுன்சில் உறுப்பினராக இருந்து வந்தபோது அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. 

இந்தியாவின் நிதி அமைச்சர் (Minister of Finance of India) இந்திய அரசின் நிதி அமைச்சின் தலைவர் ஆவார். அமைச்சரவையின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர் அரசின் நிதிக்கொள்கைக்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, பல்வேறு அமைச்சரவைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை இவரே தீர்மானிக்கிறார். இவருக்கு உதவியாக நிதி இராசாங்க அமைச்சர், துணை நிதி அமைச்சர் ஆகியோர் செயல்படுகின்றனர்.

விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது நிதி அமைச்சராக ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்துள்ளார். இவரே இந்தியாவின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தவர். தற்பொழுதைய நிதியமைச்சராக நிர்மலா சீத்தாராமன் இருந்து வருகிறார். 

பட்ஜெட் என்றால் என்ன? 
இந்திய அரசியலில் பட்ஜெட் என்ற சொல்லே இல்லை. இந்திய அரசிய சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லுக்கு பதிலாக அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கை என்ற பதமே உள்ளது. இந்திய அரசின் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை கணக்கிடுவதால் இதனை பொதுவாக பட்ஜெட் என்று அழைக்கின்றோம். 

இது முந்தைய ஆண்டையும் நிகழாண்டையும் அடுத்துவரும் ஆண்டையும் கணக்கில் வைத்து தொகுப்படுவது ஆகும். இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது தொகுப்பு நிதி மற்றும் பொது நிதி, தற்செயல் நிதியின் நிலை நிதி மற்றும் ஒருங்கிணைப்பு நிதி மூலம் தொகுக்கப்படும் ஒன்றாகும். அரசின் செலவுகளை அனைத்தும் ஒருங்கிணைத்த நிதியான தொகுப்பு நிதி, பொது கணக்கு நிதி மற்றும் தொகுப்பு நிதி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு செய்யப்படுகின்றன. 

அரசின் செலவுகளை சட்டவிதி 113ன் கீழ் அனைத்தும் அளவீடு செய்யப்படுகின்றது. சட்டவிதி 110 கீழ் பினான்சியல் பில் என அழைக்கப்படும் நிதி மசோதா பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக தாக்கல் செய்யப்படும். இந்த பண மசோதாவில் விதிக்கப்படும் அனைத்து வரிகள் அதன் செயலாக்கம் அனைத்தும் விளக்கப்படும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 112ன் படி, நாட்டின் ஒரு ஆண்டின் பட்ஜெட்டில், இந்திய அரசாங்கத்தின் அந்த ஆண்டிற்கான வரவு மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டிற்கான அறிக்கை தொகுப்பே நிதிநிலை அறிக்கை. நிதியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும். ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய நாட்டின் முதல் குடிமகன் என அழைக்கப்படும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். அதன்பின்புதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியும். நிதிநிலை அறிக்கை மாநிலம், மத்திய அளவில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்தியில் குடியரசு தலைவரிடம் அனுமதி பெறுவது போல் மாநிலத்தில் அந்தந்த மாநில ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும். பட்ஜெட் நாட்டின் வரவு செலவு நாட்டின் நிதிநிலைமை அத்துடன் நாட்டின் நலத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகள் உள்ளடக்கியது. 

நிதியாண்டு: 1867-க்கு முன்னர் இந்திய நிதியாண்டு மே 1-இல் தொடங்கி ஏப்ரல் 30-இல் முடிவடைந்தது. தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய நிதியாண்டு, பிரிட்டிஷ் அரசின் நிதியாண்டுடன் இணைந்ததாக இருக்குமாறு 1867-இல் மாற்றி யமைக்கப்பட்டது. இதன்படி, இந்தியாவின் நிதியாண்டு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1-இல் தொடங்கி மார்ச் 31-இல் முடிவடைகிறது.

பட்ஜெட்டும் பொருளாதாரமும்: பொருளாதாரத்தின் அனைத்து முக்கிய முறைமைகளும் பட்ஜெட்டில் அடங்கும். பட்ஜெட்டில் கொடுக்கல் வாங்கல், விற்பனை, வரி, கொள்முதல், மாணியம், அளிப்பு, வங்கி, கடன், வட்டி தள்ளுபடி, இவை அனைத்து பதங்களை கொண்ட மொத்த உருவமே பட்ஜெட் ஆகும். 

பட்ஜெட் வகைகள்: இந்தியாவில் பொது பட்ஜெட், இடைக்கால பட்ஜெட், சிறப்பு நிலை பட்ஜெட் என பல நிலைகள் பட்ஜெட் வாசிப்புகள் உள்ளன. 

பட்ஜெட் தயாரிப்பு: இந்தியாவில் பட்ஜெட் தயாரிப்பானது மிகவும் கவனமாக தெளிவாக நடைபெறுகிறது. பட்ஜெட் தயாரிப்பு பணி குடியரசு தலைவர் மாளிகையில் அச்சடிக்கப்பட்டது. பின்னர் ஆரம்பத்தில் தில்லி மிண்டோ சாலையில் உள்ள பாதுகாப்பு அச்சகத்துக்கு மாற்றப்பட்டது. 1980க்கு பின்னர் நிதியமைச்சக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பிரதேயேக பகுதியில் அச்சு அமைத்து அச்சடிக்கப்படுகின்றது. 

பட்ஜெட் தயாரிப்பின் போது பாதுகாப்பாக இருக்கவும் ரகசியங்கள் எதுவும் கசியக்கூடாது என்பதில் அரசு தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றது. பாதுகாப்பு காரணமாக பட்ஜெட் தகவல்கள் அனைத்தும் தொகுத்து உருவாக்கப்படும் காலத்தில் கடைசில நாட்களுக்கு இப்பணியில் ஈடுபடுவோர்களுக்கு வீடு, உணவு தேவைகள் அனைத்தும் வழங்கி வீட்டிற்கு அனுப்பாமல் பட்ஜெட் தாக்கல் செய்தபின் மட்டுமே விட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். இக்காலங்களில் வெளியுலக தொடர்பு எதுவும் பெற முடியாது. மொபைல் போன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வரவு - செலவு திட்டத்தை நிர்ணயிப்பது யார்? 
பட்ஜெட்டானது, நிதியமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் செலவு அமைச்சகங்கள் சம்மத்தப்பட்ட ஆலோசனை செயல்முறை மூலம் உருவாக்கப்படுகிறது. அமைச்சகங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, திட்டமிட்டுச் செலவு செய்வதற்கு நிதியமைச்சகம் வழிகாட்டியாகச் செயல்படுகிறது. நிதியமைச்சகத்தில் உள்ள பொருளாதாரத் தொடர்புகள் துறை பட்ஜெட் பிரிவானது, வரவு - செலவு திட்டத்தினை ஒருங்கிணைந்து தயாரிப்பதற்குக் காரணமாக உள்ளது. 

பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது? 
பட்ஜெட் பிரிவானது, அனைத்து ஒள்றிய அமைச்சகங்கள், யூனியன் பிரதேசங்கள், தன்னாட்சி அமைப்புகள், துறைகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு அடுத்த ஆண்டின் மதிப்புகளின்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. அதன் பின்னர், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்களது கோரிக்கைகளை அரசிற்கு அனுப்பும், பின்னர் அமைச்சகங்கள் மற்றும் நிதியமைச்சகத்திற்கு இடையே விரிவான விவாதங்கள் நடைபெறும். அதே சமயத்தில், பொருளாதாரத்துறை மற்றும் வருவாய் துறையானது, விவசாயிகள், வர்த்தகர்கள், அந்நிய நிதிநிறுவனங்கள், பொருளாதார நிபுணர்கள், சிவில் குழுக்கள் மற்றும் பங்குதாரர்களைச் சந்தித்துக் கேட்டறிந்த தங்கள் கருத்துக்களையும் முன்னின்று கூறவேண்டும்.  

பட்ஜெட்டிற்கு முந்திய கூட்டம் முடிவடைந்துவிட்டால், வரித் திட்டங்கள் சார்ந்த இறுதி முடிவுகள் நிதியமைச்சரால் எடுக்கப்படும். பின்னர், பிரதமர் முன்னிலையில் இந்தத் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு, வரவு-செலவு திட்டமானது நிலை நிறுத்தப்படும். பட்ஜெட் தாக்கல் அரசாங்கத்தின் ஆலோசனையின்படி, சபாநாயகர் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியினை ஒப்புக்கொண்ட பின் நாடாளுமன்றத்தின் செயலகத்தின் பொதுச் செயலாளர், குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் வாங்குகிறார். பட்ஜெட்டின் முக்கிய மதிப்பீடுகள் மற்றும் திட்டங்களை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டுகிறார். 

நிதியமைச்சர், பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் தன்னுடைய 'அமைச்சரவை சுருக்கம்' மூலம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. 'ஆண்டு நிதி அறிக்கை' மத்திய நிதி அமைச்சர் உரையாற்றிய பின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தினத்தன்று காலையில், பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்த பின் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படுகிறது. 

பட்ஜெட் தாக்கல்செய்யும் நாளை முடிவுசெய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருடையது. பட்ஜெட் நாளில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்குமுன், குடியரசுத் தலைவரை நிதியமைச்சர் சந்திப்பது ஒரு சம்பிரதாயம்.

செயல்முறை: 
பகுதி 1 - நாட்டின் பொதுவான பொருளாதாரக் கணக்கெடுப்பு மற்றும் நாட்டின் கொள்கை அறிக்கைகளைக் கொண்டது.

பகுதி 2 - புதிய வரித் திட்டங்கள் அடங்கியது 'ஆண்டு நிதி அறிக்கை' மத்திய நிதி அமைச்சர் உரையாற்றிய பின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்ட அன்று எந்த விவாதமும் நடைபெறுவதில்லை. 

பொருளாதார ஆய்வு முறை:  பொருளாதார ஆய்வு முறை 1951-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய வரவு -செலவுத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறையாகப் பொருளாதார ஆய்வு முறை அமைகிறது. பொருளாதார ஆய்வை நிறைவேற்றும் பொறுப்பு, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையைச் சார்ந்தது. பொருளாதார ஆய்வுக்குத் தலைமைப் பொருளாதார ஆலோசகரும் நிதியமைச்சரும் ஒப்புதல் அளிப்பார்கள்.

பொருளாதார ஆய்வைக் கல்லூரி மதிப்பெண் அறிக்கையுடன் (progress report) ஒப்பிடலாம். அரசின் கடந்த ஆண்டு பொருளாதாரச் செயல்பாட்டை அளவிடும் மதிப்பீட்டு அறிக்கையாக இந்த ஆய்வு விளங்குகிறது. அதன் விரிவான புள்ளிவிவரத் தரவுகள் பொருளாதாரக் குறியீடுகளையும் சமூகக் குறியீடுகளையும் கோடிட்டுக் காட்டுகின்றன.

1. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், வெளி நாட்டு வர்த்தகம், வேளாண் உற்பத்தி, தொழில்துறை உற்பத்தி போன்ற பொருளா தாரத்தின் அனைத்து அம்சங்களையும் பொருளாதாரக் குறியீடுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

2. மக்கள்தொகை, பாலினம், கல்வி, சுகாதாரம், கைபேசிப் பரவல், குடும்பங் களின் செலவினம், குடும்பங்களின் சேமிப்பு ஆகியவற்றின் பல்வேறு பரிமாணங்களைச் சமூகக் குறியீடுகள் வழங்குகின்றன.

பட்ஜெட் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?
வரவு-செலவு திட்ட விவாதமானது இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது. 
1. பொது விவாதம் 
2. விரிவான விவாதம் 

பொது விவாதம்: பட்ஜெட் தாக்கல் செய்த ஓரிரு நாட்களுக்குப்பின், மாநிலங்களவையில் 2-3 நாட்களுக்குப் பொதுவான விவாதம் நடைபெறும். நிதி அமைச்சர் பதிலளித்த பின் விவாதம் ஒரு முடிவுக்கு வரும். 

நிதி ஆண்டில் ஆரம்ப மாதங்களில் ஏற்பட்ட செலவினங்களைச் சரிக்கட்ட வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் பெறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் சபை ஒத்தி வைக்கப்படுகிறது. 

விரிவான விவாதம்: மானியங்கள் பற்றிய கோரிக்கைகள் உரிய நிலைக் குழுக்களால் ஆராயப்படுகிறது. இந்தக் கோரிக்கைகள் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

எந்த ஒரு உறுப்பினரும் பின்வரும் மூன்று இயக்கங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளைப் பெற முடியும்.

1. கொள்கை குறைப்பு ஒப்புதலின்மை 
2. பொருளாதாரம் குறைப்பு 
3. டோக்கன் குறைப்பு மானியங்கள் பற்றிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் கடைசி நாளில், நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்குச் சபாநாயகர், சபையில் வாக்கெடுப்பை முன்வைக்கிறார்.

மானியக் கோரிக்கைகளுக்குப் பின், மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் இந்தியாவின் திரட்டு நிதியிலிருந்து எடுத்துச் செலவிட அரசு, அதிகாரங்களை வழங்குகிறது. 

நாடாளுமன்றத்தில் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் நிதி மசோதா நிறைவேற்றப்படுகிறது. நிதி மசோதா இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு 75 நாட்களுக்குள் குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெறப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. 

நிதி மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட பின் வரவு-செலவு திட்ட செயலாக்கம் முடிவடைகிறது.

                                                                                                                                       தொடரும்...

ADVERTISEMENT
ADVERTISEMENT