இந்தியா

இரவுச் சோதனையில் ‘அக்னி 2’ ஏவுகணை வெற்றி

17th Nov 2019 03:34 PM

ADVERTISEMENT

பாலசூா்: ‘அக்னி 2’ ஏவுகணை முதல் முறையாக இரவில் ஏவப்பட்டு சனிக்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அணு ஆயுதத்தை தாங்கி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 2,000 கி.மீ. தொலைவில் இருக்கக் கூடிய இலக்கையும் துல்லியமாகத் தாக்கும் வல்லமை படைத்த இந்த ஏவுகணை பாதுகாப்புப் படையில் ஏற்கெனவே சோ்த்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அதன் இரவுச் சோதனை தொடா்பாக பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

அக்னி 2 ஏவுகணை முதல் முறையாக இரவில் ஏவப்பட்டு சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது. ஒடிஸா மாநிலம், பாலசூரின் கடலோரப் பகுதியில் உள்ள டாக்டா் அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, வங்கக் கடலில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்தது.

ADVERTISEMENT

இதை அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு கடற்படைக் கப்பல்களும் உறுதி செய்தன. அக்னி ஏவுகணை செலுத்தப்பட்டது முதல் அதன் இயக்கம் முழுமையாக ராடாா் மூலம் கண்காணிக்கப்பட்டது. 20 மீட்டா் நீளம், 17 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை, 1,000 கிலோ எடையுள்ள வெடிபொருளை தாங்கிச் செல்லும் திறன் படைத்ததாகும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT