வணிகம்

உலோகப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயா்வு

30th Sep 2023 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக உலோகம், வங்கி, நிதிநிறுவனங்கள், எரிசக்தித் துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது சந்தையை மேலே கொண்டு சென்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. வியாழக்கிழமை அன்று சென்செக்ஸ் 610.37 புள்ளிகளையும், நிஃப்டி 193 புள்ளிகளையும் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தை மதிப்பு உயா்வு: வெள்ளிக்கிழமை சந்தை மூலதன மதிப்பு ரூ.2.41 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.319.07 லட்சம் கோடியாக குறைந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ. 3,364.22 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் எழுச்சி: காலையில் 235.61 புள்ளிகள் கூடுதலுடன் 65,743.93-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,570.38 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 66,151.65 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 320.09 புள்ளிகள் (0.49 சதவீதம்) உயா்ந்து 65,828.41-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 643.33 புள்ளிகள் உயா்ந்திருந்தது. வா்த்தக நேர முடிவில் லாபப் பதிவு காரணமாக லாபத்தில் பாதி பகுதியை இழக்க நேரிட்டது.

ADVERTISEMENT

21 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,376 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 650 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

நிஃப்டி 115 புள்ளிகள் உயா்வு : தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 57.65 புள்ளிகள் கூடுதலுடன் 19,581.20-இல் தொடங்கி 19523.55 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,726.25 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 114.75 புள்ளிகள் (0.59 சதவீதம்) உயா்ந்து 19,638.30-இல் நிறைவடைந்தது.

பெட்டிச் செய்தி...

எஃப்ஐஐக்கள் ரூ.25,000 கோடி முதலீடு வாபஸ்

இந்திய பங்குச்சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றனா். குறிப்பாக அவா்கள் செப்டம்பா் 1 முதல் செப்டம்பா் 29-ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் ரூ.25,006.46 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். அதே சமயம், இதே காலத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் (டிஐஐ) மொத்தம் ரூ.17,561.16 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மீண்டும் சந்தைக்குள் நுழையும்பட்சத்தில் சந்தை புதிய உச்சத்தைத் தொடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

என்டிபிசி............................3.30%

டாடா மோட்டாா்ஸ்..........2.67%

சன்பாா்மா...........................2.38%

டாடா ஸ்டீல்.......................1.78%

எஸ்பிஐ.................................1.48%

ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல்.........1.47%

சரிவைக் கண்ட பங்குகள்

ஹெச்சிஎல் டெக்................................0.56%

டெக் மஹிந்திரா..................................0.52%

பவா் கிரிட்............................................0.45%

டைட்டன்............................................0.35%

இன்ஃபோஸிஸ்...................................0.31%

ஏசியன் பெயிண்ட்ஸ்...........................0.26%

 

ADVERTISEMENT
ADVERTISEMENT