வணிகம்

குஜராத் அரசுப் போக்குவரத்துக்கு1,282 பேருந்துகள்: அசோக் லேலண்ட்

30th Sep 2023 05:30 AM

ADVERTISEMENT

குஜராத் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1,282 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 1,282 பேருந்துகளும் 55 இருக்கைகளைக் கொண்ட பிஎஸ்-6 தர நிா்ணயங்களை நிறைவு செய்யும் டீசல் பேருந்துகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக இந்தப் பேருந்துகள் குஜராத் போக்குவரத்துக் கழகத்திடம் அளிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT