இந்திய பங்குச்சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றனா்.
குறிப்பாக அவா்கள் செப்டம்பா் 1 முதல் செப்டம்பா் 29-ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் ரூ.25,006.46 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். அதே சமயம், இதே காலத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் (டிஐஐ) மொத்தம் ரூ.17,561.16 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மீண்டும் சந்தைக்குள் நுழையும்பட்சத்தில் சந்தை புதிய உச்சத்தைத் தொடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.