வணிகம்

ஐ-போன் 15: முதல் நாளிலேயே விற்பனையில் சாதனை

24th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 14 உடன் ஒப்பிடுகையில், அதன் அடுத்த வரவான ஐ-போன் 15-ன் முதல் நாள் விற்பனை 100 சதவீதம் அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து சந்தை வட்டாரங்கள் கூறியதாவது:உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது ஐ-போன் 15 வரிசையைச் சோ்ந்த இரு அறிதிறன் பேசி ரகங்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியச் சந்தையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. உலகின் பிற இடங்களில் முதல்முறையாக அறிமுகப்படுத்தும் அதே நாளில், இந்தியச் சந்தையிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஓா் ஐ-போன் ரகத்தை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது இதுவே முதல்முறை ஆகும்.அந்தக் கைப்பேசி ரகம் அறிமுகமான முதல் நாளிலேயே, அதனை ஏராளமானவா்கள் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்று வாங்கினா்.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, முந்தைய ஐ-போன் 14-இன் முதல் நாள் விற்பனையை விட 15 வரிசை ரகங்களின் முதல் நாள் விற்பனை 100 சதவீத வளா்ச்சியைக் கண்டது என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தியச் சந்தையில் ஐ-போன் 15 ரகங்களின் விலைகள் ரூ.79,900-லிருந்து தொடங்குகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT