இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் தொடா்ந்து நான்காவது முறையாக 221.09 புள்ளிகள் சரிந்தது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டுநிஃப்டி 68.10 புள்ளிகள் சரிவடைந்தது.உலகளாவிய சந்தைக் குறிப்புகள் வியாழக்கிழமை எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது.
இதன் காரணமாக ஹெல்த்கோ், நுகா்பொருள் நிறுவனப் பங்குகளை முதலீட்டாளா்கள் அதிகம் விற்றதால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டுமே வெள்ளிக்கிழமை சரிவைச் சந்தித்ததாக பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.சென்செக்ஸ் சரிவு: காலையில் 66,215.04-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 66,445.47 வரை மேலேயும், 65,952.83 வரை கீழேயும் சென்று, இறுதியில் 221.09 புள்ளிகள் (0.33 சதவீதம்) குறைவாக 66,009.15-இல் முடிவடைந்தது.
17 பங்குகள் விலை சரிவு:
சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.நிஃப்டி 68 புள்ளிகள் இழப்பு: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 19,840.55-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,798.65 வரை மேலேயும்,19,657.50 வரை கீழேயும் சென்று, இறுதியில் 68.10 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைவாக 19,674.25-இல் நிறைவடைந்தது.