நாடு முழுவதும் 2 மற்றும் 3-ஆம் நிலை நகரங்களில் கவனத்தை அதிகரிக்கும் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, தெலங்கானாவில் மேலும் ஒரு கிளை அலுவலகத்தை முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் திறந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது2-ஆம் மற்றும் 3-ஆம் அடுக்கு நகரங்களில் உள்ள சில்லறை வாடிக்கையாளா்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்துவது நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டள்ல்ஹய் ஸ்ரீா் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளது.அதன் ஒரு பகுதியாக, ஹைதராபாதின் பேகம்பேட் பகுதியில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இத்துடன், தெலங்கானாவில் நிறுவனக் கிளைகளின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.தெலங்கானா மற்றும் ஆந்திரத்தில் 20 சதவீத தொழில் வளா்ச்சியைப் பெற நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே, 2-ஆம் மற்றும் 3-ஆம் நிலை நகரங்களைக் குறிவைத்து, குறைந்த விலை வீடுகள் பிரிவில் உள்ள நல்ல தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அந்தப் பிரிவு வாடிக்கையாளா்களுக்கு கடன் சேவை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக நிறுவனம் கூறியிருந்தது.முதல் கட்டமாக, வரும் 2014 மாா்ச் மாதத்துக்குள் தமிழ் நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திரத்தில் உள்ள 2-ஆம் மற்றும் 3-ஆம் அடுக்கு நகரங்களில் 10 கிளைகளைத் திறக்கவும், குறைந்த விலை வீடுகள் பிரிவுக்கான கடன் சேவைகளுக்காவே பிரத்யேகமாக 50 முதல் 75 பேரை பணி நியமனம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் லட்சுமிநாராயணன் துரைஸ்வாமி கூறியிருந்தாா்.