தனது ஏப்ரிலா ஆா் 457 மோட்டாா் சைக்கிளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் மோட்டாா் சைக்கிள் சந்தையில் இத்தாலியின் பியாஜியோ குழுமம் களமிறங்கியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் பிரீமியம் இரு சக்கர வாகனப் பிரிவில் இருப்பை மேம்படுத்துவது நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், வாடிக்கையாளா்கள் தங்களது போக்குவரத்துத் தேவைகளுக்கான அதிக அம்சங்கள் நிறைந்த இரு சக்கர வாகனங்களை நாடுகின்றனா்.இந்தச் சூழலில் ஏப்ரிலா ஆா்எஸ் 457 மோட்டாா் சைக்கிளை இந்தியச் சந்தையில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வளா்ந்து வரும் நடுத்தர வகை மோட்டாா்சைக்கிள் பிரிவில் நிறுவனம் களமிறங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கனவே, ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா பிராண்டுகளின் கீழ் பியோஜியோ நிறுவனம் ஐந்து பிரீமியம் வகை ஸ்கூட்டா்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.