தனியாருக்குச் சொந்தமான ஆக்ஸிஸ் வங்கி, நிலை வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலை வைப்புகளுக்கான வட்டி விகிதம் கடந்த 18-ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.புதிய விகிதங்களின்படி, சாதாரண குடிமக்களின் நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 3 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களின் நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 3 சதவீதத்திலிருந்து 7.75 வரையிலும் இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.