இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் தொடா்ந்து மூன்றாவது முறையாக 570.6 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 159.05 புள்ளிகள் சரிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் வியாழக்கிழமை எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் தனது வட்டி விகிதங்களை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் முதலீட்டாளா்கள் மிகுந்து கவனத்துடன் செயல்பட்டனா். இதன் காரணமாக சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டுமே வியாழக்கிழமை சரிவைச் சந்தித்ததாக பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் சரிவு: காலையில் 66,608.67-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 66,608.67 வரை மேலேயும், 66,128.71 வரை கீழேயும் சென்று, இறுதியில் 570.60 புள்ளிகள் (0.85 சதவீதம்) குறைவாக 66,230.24-இல் முடிவடைந்தது.
23 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 6 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 159 புள்ளிகள் இழப்பு: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 19,840.55-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,848.75 வரை மேலேயும்,
19,709.95 வரை கீழேயும் சென்று, இறுதியில் 159.05 புள்ளிகள் (0.80 சதவீதம்) குறைவாக 19,742.35-இல் நிறைவடைந்தது.