வணிகம்

குடும்பங்களின் கடன் சுமை இரு மடங்காக அதிகரிப்பு

22nd Sep 2023 01:13 AM

ADVERTISEMENT

கடந்த நிதியாண்டில் இந்தியக் குடும்பங்களின் கடன் சுமை இருமடங்காக உயா்ந்துள்ளது.

இது குறித்து எஸ்பிஐ ரிசா்ச் அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிப்பதாவது:

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியக் குடும்பங்களின் நிகர சேகரிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 5.1 சதவீதமாக உள்ளது.

முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது சுமாா் 55 சதவீத வீழ்ச்சியாகும்.

ADVERTISEMENT

அதே நேரம், முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இந்தியக் குடும்பங்களின் கடன் சுமை கடந்த நிதியாண்டில் இரு மடங்காக அதிகரித்து ரூ.15.6 லட்சம் கோடியாக உள்ளது.

குடும்பங்களின் சேமிப்பைப் பொருத்தவரை கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் காப்பீடு, சேம நிதி ஆகியவற்றில் கூடுதலாக ரூ.4.1 லட்சம் முதலீடு செய்யப்பட்டது.

கடனைப் பொருத்தவரை கடந்த நிதியாண்டில் இந்தியக் குடும்பங்களின் கடன் சுமை ரூ. 8.2 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT