வணிகம்

பங்குச்சந்தை தொடர்ந்து 2-வது நாளாக கடும் சரிவு!

21st Sep 2023 04:49 PM

ADVERTISEMENT

பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று(புதன்கிழமை) 66,800.84 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற நிலையில் இன்று(வியாழக்கிழமை) 66,608.67 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 570.60 புள்ளிகள் குறைந்து 66,230.24 புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 159.05 புள்ளிகள் குறைந்து 19,742.35 புள்ளிகளில் முடிந்தது. 

ADVERTISEMENT

அதானி துறைமுகங்கள் (1.31%), டெக் மஹிந்திரா (1.02%), டாக்டர் ரெட்டி நிறுவனம் (0.78%), பிபிசிஎல் (0.77%), பார்தி ஏர்டெல் (0.68%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டன.

அதேநேரத்தில் எம்&எம் (-3.02%), ஐசிஐசிஐ வங்கி (-2.76%), சிப்லா (-2.57%), எஸ்பிஐ (-2.28%), பஜாஜ் ஆட்டோ(-2.02%)  உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன. 

இதையும் படிக்க | இதழியலில் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பம்: ஆபத்தா, வாய்ப்பா?

ADVERTISEMENT
ADVERTISEMENT