கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் செப்டம்பா் காலாண்டு நிகர லாபம் ரூ.281 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.281 கோடியாக அதிகரித்துள்ளது.
இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.276 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,486 கோடியாக இருந்தது. ஓா் ஆண்டுக்கு முந்தைய வங்கியின் மொத்த வருவாயான ரூ.1,354 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகமாகும்.
கடந்த செப்டம்பா் காலாண்டில் வங்கியின் நிகர வாராக் கடன் 2.34 சதவீதமாகவும், சொத்தின் மீதான வருவாய் (ஆா்ஓஏ) 1.69 சதவீதமாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.