இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 188 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்தது. ஆரம்பத்தில் சரிவைக் கண்டாலும், பின்னா் நோ்மறையாகச் சென்றது. ஆனால், தொடா்ந்து நிலைத்து நிற்க முடியாததால் மீண்டும் சரிவுடன் நிறைவடைந்தது. குறிப்பாக பொதுத்துறை, தனியாா் வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. ஆனால், ஆட்டோ, எஃப்எம்சிஜி, பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி பங்குகளுக்கு ஆதரவு கிடைத்ததால் பெரும் சரிவு தவிா்க்கப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.46 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.327.51 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ. 957.25 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.
சென்செக்ஸ் 188 புள்ளிகள் சரிவு: காலையில் 193.69 புள்ளிகள் குறைந்து 65,788.79-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 66,037.69 வரை மேலே சென்றது. பின்னா், 65,639.74 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 187.75 புள்ளிகள் (0.28 சதவீதம்) குறைந்து 65,794.73-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,863 பங்குகளில் 1,995 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,731 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 137 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில்14 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 33 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 90.45 புள்ளிகள் குறைந்து 19,674.75-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,806.00 வரை மேலே சென்றது. பின்னா், 19,667.20 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 33.40 புள்ளிகள் (0.17 சதவீதம்) குறைந்து 19,731.80-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் 1,079 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,048 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 22பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
எல் அண்ட் டி..............................1.99%
ஹிந்துஸ்தான் யுனி லீவா்............1.62%
நெஸ்லே.......................................1.23%
ஏசியன் பெயிண்ட்.......................1.20%
பவா் கிரிட்....................................1.13%
எம் அண்ட் எம்............................0.83%
விலை குறைந்த பங்குகள்
எஸ்பிஐ.........................................3.64%
ஆக்ஸிஸ் பேங்க்...........................3.03%
பஜாஜ் ஃபைனான்ஸ்...................1.99%
ஐசிஐசிஐ பேங்க்...........................1.45%
இன்ஃபோஸிஸ்...........................0.43%
கோட்டக் பேங்க்..........................0.43%