வணிகம்

டிசிஎஸ் நிறுவனத்துக்கு புதிய சிஇஓ நியமனம்!

31st May 2023 05:13 PM

ADVERTISEMENT

 

டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கே. கீர்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை செயல் அதிகாரியாக இருந்த ராஜேஷ்கோபிநாதன் இன்று (மே 31) அப்பதவியிலிருந்து விலகுவதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

டாடா குழுமத்துக்குச் சொந்தமான டிசிஎஸ் நிறுவனம், 150க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்களை நிறுவி மென்பொருள் துறையில் கோலோச்சி வருகிறது. 

இந்நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் மேலாண்மை இயக்குநராகவும் இருந்தவர் ராஜேஷ் கோபிநாதன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 

ADVERTISEMENT

தற்போது சிஇஓ பொறுப்பிலிருந்து அவர் விலகியுள்ளார். ஊழியர்களுக்கு பொறுப்பு விலகல் குறித்து கடிதம் அனுப்பியுள்ள அவர், கடந்த 6 ஆண்டுகளாக நமது நிறுவனத்தை வழிநடத்தியது பெருமை அளிக்கிறது. ஏனெனில் அந்த காலகட்டத்தில் நம் வளர்ச்சியும் ஏற்பட்ட மாற்றங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமானது எனக் குறிப்பிட்டுள்ளார். 

ராஜேஷ் கோபிநாதனுக்கு அடுத்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கே. கீர்த்திவாசன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT