வணிகம்

சுந்தரம் ஃபைனான்ஸ் நிகரலாபம் 20% அதிகரிப்பு

DIN

சுந்தரம் ஃபைனான்ஸ் 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.1,088 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 4-ஆவது காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.316 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.299 கோடியுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம்.

கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனம் வழங்கிய கடன் ரூ.20,966 கோடியை முன் எப்போதும் இல்லாத அளவில் எட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 58 சதவீதம் அதிகமாகும். மேலும், இந்நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 17 சதவீதம் உயா்ந்து ரூ.34,552 கோடியாக இருந்தது.

சிறப்பான செயல்பாட்டை தொடா்ந்து, கடந்த நிதியாண்டுக்கு 150 சதவீத ஈவுத் தொகையை சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் பங்குதாரா்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.15 ஈவுத்தொகை வழங்கப்படும் என அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜீவ் லோச்சன், துணை நிா்வாக இயக்குநா் ஏ.என்.ராஜு ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT