வணிகம்

எல்ஐசி நிகர லாபம் 5 மடங்காக உயா்வு

26th May 2023 01:13 AM

ADVERTISEMENT

கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிகர லாபம் 5 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனவரி முதல் மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,191 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.2,409 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனம் ஈட்டியுள்ள நிகர லாபம் ஐந்து மடங்குக்கும் மேலாகும்.

ADVERTISEMENT

எனினும், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,15,487 கோடியிலிருந்து ரூ.2,01,022 கோடியாகக் குறைந்துள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் ரூ.14,663 கோடியாக இருந்தது. அது, கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.12,852 கோடியாகக் குறைந்துள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,125 கோடியாக இருந்தது. அது, 2022-23-ஆம் நிதியாண்டில் பல மடங்கு அதிகரித்து ரூ.35,997 கோடியாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT