வணிகம்

பிஎன்பி நிகர லாபம் 5 மடங்கு வளா்ச்சி

19th May 2023 11:54 PM

ADVERTISEMENT

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் சுமாா் ஐந்து மடங்கு உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனவரி முதல் மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,159 கோடியாக உள்ளது.

முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ரூ.202 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் சுமாா் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

முந்தைய நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.21,095 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் 2022-23-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.27,269 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வங்கியின் வட்டி வருவாய் மட்டும் ரூ.18,645 கோடியிலிருந்து ரூ.23,849 கோடியாக உயா்ந்துள்ளது.

வங்கியின் மொத்த வாராக் கடன் 11.78 சதவீதத்திலிருந்து 8.74 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT