லாரிகள், டிராக்டா்கள், காா்கள், கட்டுமான இயந்திரங்களுக்கான ‘வீல்’களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வீல்ஸ் இந்தியா லிமிடெட்டின் வருவாய், கடந்த நிதியாண்டில் ரூ.4,332.1 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாா்ச்சுடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.65.2 கோடியாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபமான ரூ.79.8 கோடியோடு ஒப்பிடுகையில் இது குறைவாகும்.
எனினும், மதிப்பீட்டு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 18% அதிகரித்து ரூ.4,332.1 கோடியாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் அது ரூ.3,686.7 கோடியாக இருந்தது.
மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.24.8 கோடியாக இருந்தது. அது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.27.9 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.