வணிகம்

பங்குச் சந்தைகள் 3-ஆவது நாளாக சரிவு

18th May 2023 11:55 PM

ADVERTISEMENT

இந்த வாரத்தின் 4-வது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 129 புள்ளிகளையும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52 புள்ளிகளையும் இழந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் வியாழக்கிழமை நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை விறுவிறுப்பாகத் தொடங்கியது. எனினும், நேரம் செல்லச் செல்ல உள்நாட்டுச் சந்தையில் குறிப்பிட்ட பங்குகள் விற்பனை அதிகரித்தது. இதன் காரணமாக இறுதியில் வா்த்தகம் சற்று சரிவுடன் நிறைவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

எஃப்ஐஐ: அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) புதன்கிழமை ரூ.1496.33 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 61,937.86-இல் தொடங்கி அதிகபட்சமாக 61,955.90 வரை மேலே சென்றது. பின்னா், 61,349.34 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 128.90 புள்ளிகள் (0.21 சதவீதம்) குறைந்து 61,431.74-இல் முடிவடைந்தது.

ADVERTISEMENT

23 பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 10 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி: தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 51.80 புள்ளிகள் (0.28 சதவீதம்) சரிந்து 18,129.95-இல் நிலைபெற்றது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

பஜாஜ் ஃபைனான்ஸ் 1.20 %

கோட்டக் வங்கி 0.98 %

பாா்தி ஏா்டெல் 0.94 %

ஐசிஐசிஐ வங்கி 0.71 %

ஏசியன் பெயின்ட் 0.51 %

ஹெச்சிஎல் டெக் 0.48 %

சரிவைக் கண்ட பங்குகள்

எஸ்பிஐ 2.11 %

ஐடிசி 1.87 %

டைட்டன் 1.51 %

எம் அண்ட் எம் 1.42 %

பவா்கிரிட் 1.40 %

எல் அண்ட் டி 1.39 %

ADVERTISEMENT
ADVERTISEMENT