வணிகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

3rd May 2023 10:14 AM

ADVERTISEMENT

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.728 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில், மே 3-ம் தேதியான இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.728 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.91 உயர்ந்து ரூ.5,706-க்கும், ஒரு சவரன் ரூ.45,648-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ரூ.81.80-க்கும், ஒரு கிலோ(கட்டி வெள்ளி) ரூ.81,800-க்கும் விற்பனையானகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT