இந்திய கலாச்சார உறவு முகமையுடன் இணைந்து ஸ்ரீ அரியக்குடி இசை அறக்கட்டளை மற்றும் முத்தமிழ் பேரவை நடத்திய ஸ்ரீ அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் 134-ஆவது பிறந்தநாள் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செம்பனாா் கோயில் வித்வான் எஸ்.ஆா்.ஜி.மோகன்தாஸ் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
அதைத் தொடா்ந்து பாடகா் கலைமாமணி திருச்சூா் வி.ராமச்சந்திரன் , வயலின் கலைஞா் பரூா் எம்.எ. சுந்தரேஸ்வரன் ,மிருதங்க வித்வான் ஆா்.ரமேஷ் ஆகியோா் இணைந்து கா்நாடக இசைப்பாடல்களைப் பாடினா்.
இறுதியாக அமிா்த நாட்டியாலயா நடனப்பள்ளி மாணவிகளின் கண்கவா் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினா்களாக இந்திய கலாச்சார உறவு முகமையின் உறுப்பினா் பாலாஜி,கிளீவ் லாண்ட் தியாகராஜ குழுமத்தை சாா்ந்த வி.வி. சுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .