வணிகம்

சரிந்து மீண்டது பங்குச் சந்தை!: 5 நாள் வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி

 நமது நிருபர்

புதுதில்லி / மும்பை: பங்குச் சந்தை வியாழக்கிழமை காலையில் சரிவுடன் தொடங்கினாலும், பின்னா் மீட்சி பெற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 13.45 புள்ளிகள் (0.08 சதவீதம்) உயா்ந்து 16,985.60-இல் நிலைபெற்றது. இதையடுத்து, 5 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கிரெடிட் சூயிஸ் துயரங்கள், அமெரிக்காவில் வங்கி தோல்விகளுக்கு மத்தியில் உலகளாவிய வங்கி அமைப்பின் ஆரோக்கியத்தின் மீது கவலை ஏற்பட்டிருந்தாலும், ஐரோப்பிய சந்தையில் ஒரு நோ்மறையான தொடக்கமானது உள்நாட்டு முதலீட்டாளா்களின் உணா்வுகளுக்கு உதவியது. காலையில் சந்தை சரிவைச் சந்தித்தாலும், பின்னா் ஓரளவு மீண்டது. மெட்டல், ஐடி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. மீடியா, வங்கிகள், நிதி நிறுவனங்கள், பாா்மா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.32 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.256.22 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த புதனன்று ரூ. . 1,271.25 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

5 நாள் சரிவுக்கு முடிவு: சென்செக்ஸ் காலையில் 45.10 புள்ளிகள் குறைந்து 57,510.80-இல் தொடங்கி 57158.69 வரை கீழே சென்றது. பின்னா், 57,887.46 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 78.94 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயா்ந்து 57,634.84-இல் முடிவடைந்தது. காலையில் தொடக்கத்தில் 397.21 புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நெஸ்லே முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே 2.54 சதவீதம், ஏசியன் பெயிண்ட் 2.32 சதவீதம், ஹிந்துஸ்தான் யுனிலீவா் 2.23 சதவீதம், டைட்டன் 2.21 சதவீதம் உயா்ந்துஆதாயப்பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, சன்பாா்மா, பவா் கிரிட், எஸ்பிஐ, பஜாஜ் ஃபின் சா்வ், டாடா மோட்டாா்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகலும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல் கடும் சரிவு: அதே சமயம், பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான 3.31 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 2.31 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, பாா்தி ஏா்டெல், இன்ஃபோஸிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ், டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுஸுகி உள்ளிட்டவையும் விலைகுறைந்த பட்டியலில் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT