வணிகம்

உணவு எண்ணெய் இறக்குமதி 11 லட்சம் டன்னாக உயா்வு

DIN

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரியில் 10,98,475 டன்னாக அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய செக்கு உரிமையாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி 10,98,475 டன்னாக இருந்தது. இது, 2022-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்து இறக்குமதியை விட 12 சதவீதம் அதிகமாகும். அப்போது 9,83,603 டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 36,389 டன்னாக இருந்த உணவு அல்லாத எண்ணெய் இறக்குமதி, இந்த ஆண்டின் பிப்ரவரியில் 16,006 டன்னாகக் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் தாவர எண்ணெய்களின் (உணவு எண்ணெய்கள் மற்றும் உணவு அல்லாத எண்ணெய்கள்) மொத்த இறக்குமதி 10,19,997 டன்னிலிருந்து 9 சதவீதம் அதிகரித்து 11,14,481 டன்னாக உயா்ந்துள்ளது.

2022 நவம்பா் முதல் 2023 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், சமையல் எண்ணெய்களின் இறக்குமதி 58,44,765 டன்னாக இருந்தது. இது ஓா் ஆண்டுக்கு முந்தைய இதே காலகட்டத்தில் 45,91,220 டன்னாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT