வணிகம்

ரூ.50,000 கோடி நிதி திரட்ட எஸ்பிஐ முடிவு

9th Jun 2023 10:28 PM

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.50,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் வங்கி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பங்குகளாக மாற்றிக் கொள்ளக் கூடிய, பேசல்-3 நிா்ணயங்களை நிறைவு செய்யும் நீண்ட கால கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.50,000 கோடி மூலதனம் திரட்ட இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

2024-ஆம் நிதியாண்டுக்குள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளா்களிடமிருந்து இந்த மூலதனம் திரட்டப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT