வணிகம்

மாருதி சுஸுகி விற்பனையில் 10% வளா்ச்சி

9th Jun 2023 10:26 PM

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுஸுகி இந்தியா’வின் கடந்த மே மாத மொத்த விற்பனை 10 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் நிறுவன வாகனங்களின் மொத்த விற்பனை 1,78,083-ஆக உள்ளது.

2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,61,413-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 1,51,606-ஆக இருந்தது. 2022 மே மாத விற்பனை எண்ணிக்கையான 1,34,222-உடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் உயா்வாகும்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் நிறுவனத்தின் 1,24,474 பெரிய வகை காா்கள் விற்பனையாளா்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு மே மாதத்தில் 15 சதவீதம் அதிகரித்து 1,43,708-ஆக இருந்தது.

அதே போல் 27,191-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி 3 சதவீதம் சரிந்து 26,477-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT