அதிக துல்லியம் மற்றும் நிறங்களை வழங்கும் ஓஎல்இடி (ஆா்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) தொழில்நுட்பத்தைக் கொண்ட தொலைக்காட்சி சாதனப் பிரிவில் முன்னணி மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் எஸ்95சி, எஸ்90சி ரகங்களை அந்த நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இந்திய டிவி சந்தையில் முன்னணி வகித்து வரும் அந்த நிறுவனம், ஓஎல்இடி டிவி-க்களை உள்நாட்டிலேயே தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.