வணிகம்

மஹிந்திரா காா்களின் விற்பனை அதிகரிப்பு

9th Jun 2023 04:26 AM

ADVERTISEMENT

மஹிந்திரா அண்டு மஹிந்திரா காா்களின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் 32,886 காா்கள் சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பட்டன.

2022 மே மாத மொத்த விற்பனையோடு ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனக் காா்களின் மொத்த விற்பனை 26,904-ஆக இருந்தது.

ADVERTISEMENT

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் பயன்பாட்டு வாகன மொத்த விற்பனை 23 சதவீதம் அதிகரித்து 32,883-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 26,632-ஆக இருந்தது.

2022 மே மாதத்தில் 2,028-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி, இந்த ஆண்டின் அதே மாதத்தில் 29 சதவீதம் அதிகரித்து 2,616-ஆக உள்ளது.

விவசாயப் பயன்பாட்டு வாகனங்களைப் பொருத்தவரை நிறுவனத்தின் கடந்த மாத மொத்த விற்பனை 34,153-லிருந்து 33,113-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT