வணிகம்

இன்ஸ்டாகிராம், முகநூல் புளூடிக்: மாதம் ரூ.699 கட்டணம்! மெட்டா அறிவிப்பு!

DIN

இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் போன்ற செயகளில் புளூ டிக் (Blue tick) எனப்படும் நீல நிற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மாதம் 699 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கணக்குகள் என்பதை குறிப்பிடும் விதமாக இன்ஸ்டாகிராம், முகநூல் செயலியில் புளூடிக் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் அதிக மக்களால் முகநூல், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் நிர்வகித்து வருகிறார். முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவை மெட்டா நிறுவனத்தைச் சேர்ந்தவை.

டிவிட்டரில் புளூடிக் அம்சத்தை பெறுவதற்கு எலான் மஸ்க் கட்டணம் நிர்ணயித்துள்ளார். அது பயனரின் விருப்பத்தின் அடிப்படையில் என்ற வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில், தற்போது இன்ஸ்டாகிராம், முகநூல் செயலியில் கணக்கு வைத்திருப்பவர்கள் புளூடிக் பெற மாதக் கட்டணத்தை மெட்டா நிர்ணயித்துள்ளது. 

இன்ஸ்டாகிராம், முகநூல் புளூடிக் பெற இந்தியாவில் மாதம் ரூ.699 என கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இது ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு
என இரு வகைகளுக்கும் பொருந்தும் எனவும் மெட்டா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT