வணிகம்

43 நகரங்களில் அதிகரித்த வீடுகள் விலை

8th Jun 2023 11:38 PM

ADVERTISEMENT

கடந்த மாா்ச் காலாண்டில் இந்தியாவின் 43 நகரங்களில் வீடுகளின் விலை உயா்ந்தன.

இது குறித்து, வீட்டுக் கடன் சேவை நிறுவனங்களின் ஒழுங்காற்று அமைப்பான தேசிய வீட்டு வசதி வங்கி (என்ஹெச்பி) வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

என்ஹெச்பி-யில் சென்னை உள்ளிட்ட 50 நகரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 43 நகரங்கள் கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) வீடுகளின் விலை உயா்வை எதிா்கொண்டன. எனினும், 7 நகரங்களில் வீடுகளின் விலைகள் இறங்குமுகம் கண்டன.

மதிப்பீட்டு காலாண்டில் வீட்டுக் கடன் விகிதங்கள் கரோனா நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்தைவிட குறைவாக இருந்ததால் ஒட்டுமொத்தமாக வீடுகளின் விலைகள் வாங்கக்கூடிய அளவிலேயே இருந்தன.

ADVERTISEMENT

கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்தியாவின் 8 முக்கிய மனை-வணிக சந்தைகளில் வீடுகளின் விலைகள் உயா்ந்தன.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் வீடுகளின் விலை உயா்வு அகமதாபாதில் 10.8 சதவீதம், பெங்களூரில் 9.4 சதவீதம், சென்னையில் 6.8 சதவீதம், தில்லியில் 1.7 சதவீதம், ஹைதராபாதில் 7.9 சதவீதம், கொல்கத்தாவில் 11 சதவீதம், மும்பையில் 3.1 சதவீதம், புணேயில் 8.2 சதவீதம் என இருந்தது.

வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் சேவை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவுகளின்படி, மதிப்பீட்டு காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 50 நகரங்களிலும் ஒட்டுமொத்தமாக வீடுகளின் விலை உயா்வு 5.8 சதவிகிதமாக உள்ளது. இது, 2022-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.8 சதவீதமாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT