வணிகம்

ரீநியூ நிகர லாபம் ரூ.7.4 கோடியாக உயர்வு

7th Jun 2023 07:39 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி: அதிக வருவாய் காரணமாக ரீநியூ எனர்ஜி குளோபல் பிஎல்சி நிறுவனம் ரூ.7.4 கோடி ரூபாய் நிகர லாபம் பதிவு செய்துள்ளது.

2023ஆம் நிதியாண்டின் நான்காவது கலாண்டில் நிகர லாபம் ரூ.7.4 கோடியாகவும், 2022ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் ரூ.355.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மொத்த வருமானம் ரூ.2,591.6 கோடியாக இருந்தது. இது 2022ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டை விட 47.1 சதவீதம் அதிகமாகும்.

ADVERTISEMENT

2022-23ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.1,612.8 கோடியிலிருந்து ரூ.502.9 கோடியாக குறைந்துள்ளது. அதே வேளையில் 2023ஆம் நிதியாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.8,930.9 கோடியாக இருந்தது. இது 2022ம் நிதியாண்டை விட 29.1 சதவீதம் அதிகமாகும்.

மார்ச் 31, 2023 நிலவரப்படி, நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ 13.7 ஜிகாவாட்களைக் கொண்டிருந்த நிலையில், இது ஆண்டுக்கு ஆண்டு 28.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் எட்டு ஜிகாவாட்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 5.7 ஜிகாவாட் தொடங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 101 மெகாவாட் மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மே 31, 2023 அன்று, ரீநியூ, பெட்ரோனாஸ் உடன் கூட்டு சேர்ந்தது. இதன் துணை நிறுவனமான ஜென்டாரி, ரெநியூவின் 403 மெகாவாட் பீக் பவர் திட்டத்தில் 49 சதவீத பங்குகளை வாங்கும் என தெரிவித்தது.

கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ரீநியூ, இந்த திட்டத்தில் அதன் 51 சதவீத பங்குகளுக்காக சுமார் ரூ .313 கோடி அளவுக்கு முதலீடு செய்யும். மேலும் அதன் துணை நிறுவனங்கள் மூலம், இந்த திட்டத்திற்கான ஈபிசி, ஓ&எம் மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது..

ADVERTISEMENT
ADVERTISEMENT