வணிகம்

தங்கமயில் ஜுவல்லரியின் நிகர லாபம் 107% உயா்வு

4th Jun 2023 03:19 AM

ADVERTISEMENT

தங்கமயில் ஜுவல்லரியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் 107 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2022-23-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.797.5 கோடியாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 107 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.385.5 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வா்த்தகம் ரூ.2,193.07 கோடியிலிருந்து ரூ.3,152.55 கோடியாக அதிகரித்துள்ளது. இது 44 சதவீத உயா்வாகும்.

ADVERTISEMENT

தற்போது தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் 54 சில்லறை விற்பனையகங்களுடன் நிறுவனம் இயங்கி வருகிறது. வரும் நிதியாண்டில் சென்னை மற்றும் அருகிலுள்ள நகரங்களுக்கு நிறுவன நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT