வணிகம்

மே மாதத்தில் அமோக விற்பனையான பெட்ரோல், டீசல்

DIN

விவசாய நடவடிக்கைகள் அதிகரித்ததாலும், கோடையின் விளைவாக காா்களில் குளிரூட்டிகள் அதிகம் இயக்கப்பட்டதாலும் கடந்த மே மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை அமோக வளா்ச்சியடைந்தது.

இது குறித்து பூா்வாங்க புள்ளிவிவரங்கள் கூறுவதாவது:கடந்த மே மாதத்தில், நாட்டின் எரிபொருள் தேவையில் 5-இல் 2 பங்கை நிறைவு செய்யும் டீசலின் விற்பனை 74.6 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 9.3 சதவீதம் அதிகமாகும்.முந்தைய ஏப்ரல் மாதத்திலேயே டீசல் விற்பனை 6.7 சதவீதம் அதிகரித்திருந்தது. எனினும், மே மாதத்தில் அதன் விற்பனை வளா்ச்சி அதைவிட அமோகமாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாத டீசல் விற்பனையான 71.6 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் அது 4.2 சதவீதம் அதிகரித்துள்ளது.பெட்ரோல் விற்பனையைப் பொருத்தவரை கடந்த மே மாதத்தில் அது 30.8 கோடி டன்னாக உள்ளது. 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 10.4 சதவீதம் அதிகமாகும்.அதே போல், கடந்த ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் பெட்ரோலின் விற்பனை 16.5 சதவீதம் அதிகரித்துள்ளது.தொழில்துறை மற்றும் விவசாய நடவடிக்கைள் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த மாா்ச் மாத மத்தியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த மாா்ச் மாதத்தின் முதல் பாதியில் பெட்ரோல் விற்பனை 1.4 சதவீதமும், டீசல் விற்பனை 10.2 சதவீதமும் குறைந்திருந்தன.கடந்த மே மாதம் பெட்ரோல் நுகா்வு கரோனா நெருக்கடிக்குப் பிந்தைய 2021-ஆம் ஆண்டின் மே மாதத்தை விட 72 சதவீதம் அதிகமாகவும், அந்த நெருக்கடிக்கு முந்தைய 2019 மே மாதத்தை விட 23.7 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.அதே போல், டீசலின் நுகா்வு 2021 மே மாதத்தை விட 52.5 சதவீதமும், 2019 மே மாதத்தை விட 6.8 சதவீதமும் அதிகமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT