வணிகம்

2023ல் டிசிஎஸ், ரிலையன்ஸ், ஜியோ டாப் சிறந்த இந்திய பிராண்டுகள்

1st Jun 2023 06:04 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி: தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் மற்றும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை நாட்டின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக உலகளாவிய பிராண்ட் ஆலோசனை நிறுவனமான இன்டர்பிராண்ட் தெரிவித்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2023ம் ஆண்டில், 50 மிகவும் மதிப்புமிக்க இந்திய பிராண்டுகள் பட்டியலில் 1.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ரூ.65,320 கோடி மதிப்புடன் இரண்டாவது பிராண்ட் இடத்தில் உள்ளது. அவரது குழுமத்தின் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் பிரிவான ஜியோவும் ரூ.49,027 கோடி மதிப்புடன் முதல் 5 இடங்களில் உள்ளது. ஐடி நிறுவனமான இன்போசிஸ் ரூ.53,323 கோடி மதிப்புடன் 3-வது இடத்தில் உள்ளது. 

ADVERTISEMENT

எச்டிஎப்சி 4வது இடத்திலும், ஜியோ 5வது இடத்திலும் உள்ளன. ஏர்டெல், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.

டாப் 10 பிராண்டுகளின் மொத்த மதிப்பில், டாப் 3 பிராண்டுகளின் பங்குகள் மட்டும் 46 சதவீதமாக உள்ள நிலையில், முதல் ஐந்து பிராண்டுகள் ஒட்டுமொத்த மதிப்பில் 40 சதவீத பங்களிப்பை இவை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த நூற்றாண்டில் முதல்முறையாக முதல் ஐந்து இடங்களில் மூன்று இடங்களை தொழில்நுட்ப நிறவனங்கள் பிடித்துள்ளது ஒரு வரலாற்று தருணமாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளை ஆராய்ந்த போது எஃப்.எம்.சி.ஜி. 25 சதவீதம் ஆபார வளர்ச்சியுடன் தொடரும் நிலையில் அதைத் தொடர்ந்து வீடு கட்டுதல் மற்றும் உள்கட்டமைப்பு 17 சதவீதமும், தொழில்நுட்பம் 14 சதவீதத்துடன் தொடர்கிறது.

முதல் பத்து இடங்களை பிடித்த நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.4.9 லட்சம் கோடி என்ற நிலையில், பட்டியலில் உள்ள மீதமுள்ள 40 நிறுவனங்களின் கூட்டு மதிப்பைவிட இது ரூ.3.3 லட்சம் கோடி என்று இண்டர்பேண்ட் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT