வணிகம்

ஏவிஜி விமான எரிபொருள் ஏற்றுமதியை தொடங்கியது ஐஓசி

DIN

சிறு விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களில் பயன்படக்கூடிய ஏவிஜி எரிபொருளை பொதுத் துறை எண்ணெய் வா்த்தக நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) முதல்முறையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஏவியேஷன் காஸ் 100 எல்எல்’ என்றழைக்கப்படும் சிறுவகை விமானங்களுக்கான எரிபொருளைஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளோம்.

தலா 16 லிட்டா் ஏவி காஸ் எரிபொருள் அடங்கிய 80 பேரல்கள் நவி மும்பையிலுள்ள ஜவாஹா்லால் நேரு துறைமுகத்திலிருந்து பப்புவா நியூ கினியாவுக்கு கடந்த வார இறுதியில் அனுப்பப்பட்டன.

வடோதராவில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட அந்த வகை விமான எரிபொருள், வெளிநாடொன்றுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது அதுவே முதல்முறை ஆகும்.

ஆளில்லா விமானங்களையும் விமானிகளுக்கான பயிற்சிப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பிஸ்டன்களில் இயங்கக் கூடிய விமானங்களையும் இயக்குவதற்கு ஏவிஜி வகை எரிபொருள் உதவும்.

அதிக ஓக்டேன் திறன் கொண்ட அந்த எரிபொருள், மிகவும் செயல்திறன் மிக்கதாகவும், மற்ற எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில் விலை குறைவானதாகவும் உள்ளது.

ஏவி கேஸ் 100 எல்எல் ஏற்றுமதி நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு உதவுவதோடு மட்டுமின்றி, பயிற்சி விமானிகள் குறைந்த செலவில் பயிற்சி பெறுவதற்கும் உதவும்.

தற்போது ஆளில்லா விமானங்களை பாதுகாப்பு படைகள் பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. அத்தகைய விமானங்களை இயக்குவதற்கு உதவும் ஏவி கேஸ் 100 எல்எல் எரிபொருளைத் தயாரித்து ஏற்றுமதி செய்வது ராணுவ ரீதியிலும் நன்மை பயக்கும்.

அந்த எரிபொருளுக்கு தென் அமெரிக்கா, ஆசிய பசிபிக், மேற்கு ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் அதிக தேவை உள்ளது. இதனைப் பயன்படுத்தி அந்தப் பிராந்திய சந்தைகளைக் கவர இநதியன் வங்கி திட்டமிட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT