வணிகம்

பட்ஜெட் கூட்டத்தொடர்... பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் நிறைவு!

31st Jan 2023 04:30 PM

ADVERTISEMENT


பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், பங்குச்சந்தை வணிகக நேர முடிவில் ஏறுமுகத்துடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்துள்ளன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 49.49   புள்ளிகள் உயர்ந்து 59,549.90 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.083 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 13.20 புள்ளிகள் உயர்ந்து 17,662.15 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.075 சதவிகிதம் உயர்வாகும்.

அதிகபட்சமாக மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட், பவர் கிரிட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டைட்டன், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏறுமுகத்தின் இருந்தன. 

ADVERTISEMENT

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதலீட்டாளர்களின் எச்சரிக்கையான அணுகுமுறையால் பங்குச்சந்தை வணிகம் சற்று ஏறுமுகத்துடன் நிறைவடைந்துள்ளது. 

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 15 நிறுவனங்களின் பங்குகள் ஏறுமுகத்தில் இருந்தன. 15 நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன. அவற்றில் டிசிஎஸ், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா, சர் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை கடும் சரிவை சந்தித்தன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT