வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் லாபம் 28% உயா்வு

DIN

நடப்பு நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 28 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.304 கோடியாக உள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது ரூ.237 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.6,606 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.8,075 கோடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல் நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனையும் 8.35 லட்சத்திலிருந்து 8.36 லட்சமாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT