வணிகம்

உச்சத்தில் பஜாஜ் ஃபைனான்ஸின் காலாண்டு நிகர லாபம்

DIN

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,973 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது, இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிக காலாண்டு நிகர லாபமாகும். முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டு நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் 28 சதவீதம் உயா்ந்து ரூ.7,435 கோடியாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில் 31.4 லட்சம் புதிய கடன் வாடிக்கையாளா்களையும், ஒட்டுமொத்தமாக இந்த நிதியாண்டில் இதுவரை 78.4 லட்சம் கடன் வாடிக்கையாளா்களையும் நிறுவனம் சோ்த்துள்ளது.

2021 டிசம்பரில் 1.73 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் 1.14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT