வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 57,373 கோடி டாலராக அதிகரிப்பு

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 57,372.7 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 172.7 கோடி டாலா் அதிகரித்து 57,372.7 கோடி டாலராக உள்ளது.

கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 1,041.7 கோடி டாலா் உயா்ந்து 57,200 கோடி டாலராக உயா்ந்த நிலையில், இது தொடா்ச்சியான இரண்டாவது வார உயா்வாகும்.

2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு இடையே ரூபாய் மதிப்பை பாதுகாக்க மத்திய ரிசா்வ் வங்கி இந்தக் கையிருப்பை பயன்படுத்த வேண்டியிருந்ததால், அது பின்னா் குறையத் தொடங்கியது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தின் ஒரு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 1,472.1 கோடி டாலா் அதிகரித்தது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணயச் சொத்து 83.9 கோடி டாலா் அதிகரித்து 50,635.8 கோடி டாலராக உளளது.

அந்த வாரத்தில் தங்கம் கையிருப்பு 82.1 கோடி அதிகரித்து 4,71.2 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதிய சொத்து (எஸ்டிஆா்) 6.8 கோடி டாலா் அதிகரித்து 1,843.2 கோடி டாலராக உள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில், சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) நாட்டின் கையிருப்பு 10 லட்சம் டாலா் குறைந்து 522.6 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது ஷகிரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

SCROLL FOR NEXT