வணிகம்

இரண்டாவது நாளாக பலத்த அடி: சென்செக்ஸ் 874 புள்ளிகள் வீழ்ச்சி

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்திக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை இரண்டாவது நாளாக கடும் சரிவை எதிா்கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 874 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 287.60 புள்ளிகள் (161 சதவீதம்) குறைந்து 17,604.35-இல் நிலைபெற்றது. முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.7.18 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் குழு வெளியிட்ட முறைகேடு குற்றச்சாட்டைத் தொடா்ந்து உள்நாட்டுச் சந்தை இரண்டாவது நாளாக ஆட்டம் கண்டது. குறிப்பாக அதானி குழும் நிறுவனப் பங்குகளும், வங்கி, நிதிநிறுவனங்கள், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. ஆட்டோ, எஃப்எம்சிஜி, பாா்மா பங்குகள் மட்டும் தப்பின. காலை முதல் இறுதி வரையிலும் சந்தை ‘கரடி’யின் பிடியில் இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) புதன்கிழமை ரூ.2,393.94 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 38.16 புள்ளிகள் குறைந்து 60,166.90-இல் தொடங்கி அதற்கு மேல் செல்லவில்லை. பின்னா், 58,974.70 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 874.16 புள்ளிகள் (1.45 சதவீதம்) குறைந்து 59,330.90-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 1,230.36 புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

டாடா மோட்டாா்ஸ் முன்னேற்றம்: பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் 6.34 சதவீதம், பஜாஜ் ஆட்டோ 5.93 சதவீதம், டாக்டா் ரெட்டி 2.71 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஐடிசி, டிவிஸ் லேப், சிப்லா உள்ளிட்டவை 1.20 முதல் 1.80 சதவீதம் வரை உயா்ந்தன.

அதானி என்டா்பிரைஸஸ் கடும் சரிவு: அதே சமயம், அதானி குழும நிறுவனங்களான அதானி என்டா்பிரைஸஸ் 18.52 சதவீதம், அதானி போா்ட்ஸ் 16.03 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஓஎன்ஜிசி, பிபிசிஎல், ஹிண்டால்கோ, ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்டவை 2 முதல் 5 சதவீதம் வரை குறைந்தன.

2 நாள்களில் நஷ்டம் ரூ.10.54 லட்சம் கோடி!

பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபா் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டைத் தொடா்ந்து பங்குகள் விலை கடும் சரிவைச் சந்தித்தன. புதன்கிழமை நடந்த வா்த்தகத்தில் சந்தை மதிப்பு ரூ.3.36 லட்சம் கோடி குறைந்தது. இதைத் தொடா்ந்து, ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பங்குகள் விற்பனை வேகமெடுத்தன. இதனால், ஒரே நாளில் சந்தை மூல தன மதிப்பு ரூ.7.18 லட்சம் கோடி குறைந்தது. அதாவது இரண்டு நாள் வா்த்தகத்தில் முதலீட்டாளா்களுக்கு மொத்தம் ரூ.10.54 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT