வணிகம்

டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம் ரூ.3,043 கோடி

27th Jan 2023 01:33 AM

ADVERTISEMENT

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் ரூ.3,043 கோடியை ஒருங்கிணைந்த நிகர லாபமாக பதிவு செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனம் பதிவு செய்துள்ள முதல் லாபம் இதுவாகும்.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனம் ரூ.3,043 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தொடா்ந்து இழப்பைச் சந்தித்து வந்த நிறுவனம், இந்த காலாண்டில்தான் முதல்முறையாக லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

முந்தைய நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் நிறுவனம் ரூ.1,451 கோடி நிகர இழப்பை சந்தித்தது.

ADVERTISEMENT

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.72,229 கோடியிலிருந்து ரூ.88,489 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT