வணிகம்

ஆந்திரா சிமெண்ட்ஸை கைப்பற்றியது சாகர் நிறுவனம்!

17th Jan 2023 08:01 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி: கடனில் சிக்கியுள்ள ஆந்திரா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை ஏலத்தில் வெற்றிகரமான சாகர் சிமெண்ட்ஸ் கையகப்படுத்தியுள்ளது. இது ஜேபி குழுமத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சாகர் சிமெண்ட்ஸ் லிமிடெட் தாக்கல் செய்த தீர்மானத்தின் மீது ஆந்திரா சிமெண்ட்ஸ் கடன் வழங்கிய குழுவினர் ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்று தனது ஒழுங்குமுறைத் தாக்கலில் தெரிவித்துள்ளது ஆந்திரா சிமெண்ட்ஸ்.

அதன்படி சாகர் சிமெண்ட்ஸ் லிமிடெட் சமர்ப்பித்த திட்டமானது கடன் வழங்குவோர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, அந்த கடிதமானது ஜனவரி 13ஆம் தேதி சாகர் சிமெண்ட்ஸ் லிமிடெட் உடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஏலத் தொகையை வெளியிடவில்லை என்றாலும், டால்மியா சிமெண்ட் மற்றும் சாகர் சிமெண்ட்ஸ் லிமிடெட் ஆகியவை இதில் போட்டியிட்டன.

ADVERTISEMENT

அதே வேளையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் ப்ரித்வி அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் செக்யூரிட்டிசேஷன் கம்பெனி லிமிடெட் தாக்கல் செய்த மனு மீது, ஆந்திரா சிமெண்ட்ஸ் திவால் நடவடிக்கைகளைத் தொடங்க தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் ஹைதராபாத் அமர்வு உத்தரவிட்டது.

முன்னதாக சாகர் சிமெண்ட்ஸ் லிமிடெட் கூறியதாவது:

ஆந்திரா சிமெண்ட்ஸ் இரண்டு உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. இது டங்கன் கோயங்கா குழுமத்திடம் இருந்து 2012-ல் ஜேபி குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஆந்திரா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சாகர் சிமெண்ட்ஸ் லிமிடெட் கையகப்படுத்துவது அதன் உற்பத்தித் திறனை மேம்படுத்தும். சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, சாகர் சிமெண்ட்ஸ் லிமிடெட் மொத்த சிமெண்ட் திறன் ஆண்டுக்கு 8.25 மில்லியன் டன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் சாகர் சிமெண்ட்ஸ் லிமிடெட் தனது நிலைப்பாட்டை ஆந்திரம் மற்றும் தெலங்கானாவிற்கு அப்பால் விரிவுபடுத்தி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT