வணிகம்

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் உயா்வு

17th Jan 2023 01:29 AM

ADVERTISEMENT

தனியாா் துறையைச் சோ்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம், கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 18.5 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.12,260 கோடியாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்திய நிகர லாபமான ரூ.10,342 கோடியோடு ஒப்பிடுகையில் 18.5 சதவீதம் அதிகமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT