வணிகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிவு

16th Jan 2023 05:00 PM

ADVERTISEMENT

 

மும்பை: இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 21 பைசா சரிந்து 81.59 வர்த்தகமானது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு 81.29 ஆக தொடங்கியது, அதே வேளையில் வர்த்தகம் முடியும் போது அது ரூ.81.73 ஆக மேலும் சரிந்தது.

இன்றைய வர்த்த நேரத்தில் இந்திய ரூபாய் அதன் முந்தைய முடிவை விட 21 பைசா குறைந்து 81.59ஆக இருந்தது. அதே வேளையில் கடந்த வெள்ளியன்று, அமெரிக்க டாலருக்கு எதிராக 8 பைசா குறைந்து 81.38 ஆக வர்த்தகமானது.

ADVERTISEMENT

உலகளாவிய பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.49 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய்க்கு 84.86 அமெரிக்க டாலராக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் 30-பங்கு குறியீடு இன்று 168.21 புள்ளிகள் குறைந்து 60,092.97 ஆக முடிந்தது, அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) 61.75 புள்ளிகள்  சரிந்து 17,894.85 ஆக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT